"யாதவனின் விழிகளின் வழியே "

வாழ்க்கை தரும் அனுபவ உளியினால், நித்தம் என்னை செதுக்குகிறேன் .

வெள்ளி, 12 டிசம்பர், 2008

சிக்கன் பிரியாணி



" பிரியாணி"

தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி ஒரு கிலோ ,
பெரிய வெங்காயம் ஆறு ,
தக்காளி ஆறு,
பச்சை மிளகாய் எட்டு ,
இஞ்சி ,பூண்டு பேஸ்ட் 5 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி,
புதினா கால் கட்டு,
கொத்தமல்லி சிறிதளவு,
தயிர் அரை டம்ளர்,
எலுமிச்சம்பழம் 1 ,
எண்ணெய் 100 மில்லி,
நெய் 100 மில்லி,
கிராம்பு , பட்டை, ஏலக்காய் ,பிரியாணி இலை
சிறிதளவு.

செய்முறை


அரிசியை களைந்து கால்மணி நேரம் ஊறவைக்கவும் .
எண்ணையை மற்றும் நெய் காயவைத்து பட்டை,லவங்கம் ,கிராம்பு ,பிரியாணி இலை போட்டு வெடித்ததும் , வெங்காயத்தை போடவும் .வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இஞ்சி பூண்டு விழுதையும் பச்சைமிளகாயையும் போட்டு நன்கு வதக்கவும் ,அத்துடன் புதினா ,கொத்தமல்லியையும் சேர்க்கவும் 5 நிமிடம் குறைவான தீயில் வேகவைத்து பின்பு தக்காளி சேர்த்து 3 நிமிடம் மூடிவைக்கவும் .


தக்காளி நன்கு சுண்டி வந்தவுடன் மிளகாய்த்துள் ,மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும் . பின்பு சிக்கன் போட்டு நன்றாக கிளறி , பாதி வெந்ததும் தயிர் சேர்த்து சிக்கன் வேகும் வரை மூடி வைக்கவும் .

அரிசியை முக்கால் வேக்காடு வேகும் வரை விடவும் பின்பு கொஞ்சம் எண்ணெய் பாதி எலுமிச்சம்பழம் சாறு சிறிது உப்பு சேர்க்கவும் .

வெந்த சாதத்தை கிரேவியில் கொட்டி கிளறி தம் போட்டு மூடி வைக்கவும் .

லேபிள்கள்:

மீன் வறுவல்



மீன் வறுவல் செய்முறை
ஒரு கிலோ மீன் வறுக்க தேவையானவை
வரமிளகாய் 12
சோம்பு ஒரு தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 4
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி தேங்காய் கால்மூடி
உப்பு தேவையான அளவு
மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் லேசாக அரைத்து , ஒரு மணி நேரம் மீனில் லந்து வைத்து தோசைக்கல்லில் பொறித்து எடுக்கவும்

லேபிள்கள்: