பெண் எப்போது அழகாக இருக்கிறாள்
பார்க்கும் போதும் , பேசும் போதும் ,கேட்கும் போதும் ,நினைக்கும் போதும் ஒரு பெண்ணைப்பற்றி உண்டாகும் அபிப்ராயங்களே அவளது அழகைத் தீர்மானிக்கின்றன . ஒரு பெண்ணைப்பற்றி எப்போதும் நல்லவிதமாகவே கேள்விப்படவேண்டும் , அது அவளது குணத்தின் அழகு ,ஒரு பெண்ணைப்பர்க்கும்போது கண்ணியமான எண்ணம் எதிரில் இருப்பவர்களுக்கு வர வேண்டும் அது அவள் பழகும் அழகு . ஒரு பெண்ணுடன் பேசும் போது அவளின் பண்பு அவளின் அன்பு , அவளின் அறிவு அவளின் ஆளுமை என ஒரு படிமம் உருவாகுமே அதுதான் மொத்த அழகு .
மழை நேரத்தில் நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்தது சிறு ஓடை உருவாவதுபோல் அவளைப்பற்றிய சம்பவங்கள் ஒன்று சேர்ந்து நம் மனதை நனைக்கவேண்டும்.அப்படிஈர நினைவுகளை உருவாக்குகிற ஒவ்வொரு பெண்ணுமே அழகிதான் . நுணுக்கமாக உருவாக்கப்பட்ட மிக அழகிய சிற்பம் நம்மை வசீகரித்தாலும் சில நிமிடங்களில் அலுத்துவிடும் ,காரணம் அது நம்மோடு எதையும் பகிர்ந்து கொள்வதில்லை , உணர்வுகளை வெளிப்படுத்தாத பெண்ணும் அப்படித்தான் எத்தனை அழகியாக இருந்தாலும் அவள் ஒரு சிற்பம் மட்டுமே . இறந்து பத்தாண்டுகள் ஆனா பின்பும் இன்னும் நினைவில் நிற்கிறார் டயானா . அவரின் அழகு எது , உரிமைகளுக்காகப் போராடிய டயானா உரிமைகள் கிடைத்தப்பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்ய ஆரம்பித்தார் ஆனால், அதை ஒரு நாளும் அவர் மறைத்ததில்லை . இந்த வாழ்க்கை எனக்கு தேவை என்று எல்லோருக்கும் அறிவித்தார் . அதுதான் அவரை இன்றுவரை மக்களின் இளவரசியாக வைத்திருக்கிறது . பல பெண்கள் ரசனையாக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணாடியைப்போல இருக்கிறார்கள் துன்பம் வரும்போது உடைந்து விழுகிறார்கள் மாறாக எதிர்த்து நிற்பவளே அழகி . தவறுகளை ஒப்புக்கொள்கிற நம்புபவர்களுக்கு வெளிப்படையாக நடக்கிற விழுந்தபின்பும் எழுந்து நிற்கிற எந்தப் பெண்ணுமே எக்காலத்துக்கும் அழகிதான். ராஜிவ்மேனன்
லேபிள்கள்: கட்டுரை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு